‘வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் புற உடல் சுமைக் கூடுகளுக்கான சவால்கள்’ குறித்த முதலாவது சர்வதேச பயிலரங்கிற்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் பெங்களூருவில் ஏற்பாடு செய்துள்ளது
‘வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் புற உடல் சுமைக் கூடுகளுக்கான சவால்கள்’ குறித்த முதலாவது சர்வதேச பயிலரங்கு பெங்களூருவில் 2024 ஏப்ரல் 16-17, அன்று நடைபெறுகிறது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) பாதுகாப்பு உயிரி பொறியியல் மற்றும் மின் மருந்தக ஆய்வகம் ஏற்பாடு செய்துள்ள இந்த பயிலரங்கை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி.மேத்யூ முன்னிலையில் தொடங்கி வைத்தார்.அப்போது பேசிய டிஆர்டிஓ தலைவர், உருமாறும் புற உடல் சுமைக் கூடுகளுக்கான தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும், ராணுவம் மற்றும் பொது மக்களுக்கான அதன் மகத்தான பயன்பாடுகளையும் எடுத்துரைத்தார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சமூகம், ஆயுதப்படைகள், தொழில்துறை மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொடர்புடையவர்கள் சவால்களை எதிர்கொள்ளவும், புற உடல் சுமைக் கூடுகளுக்கான எதிர்கால வரைபடத்தை உருவாக்கவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.