Sun. Apr 13th, 2025

2024 மார்ச் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 4.85 சதவீதமாக குறைந்தது

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ), அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் மற்றும் மார்ச் 2024-க்கான கிராமப்புற, நகர்ப்புற மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டெண்ணை (தற்காலிகமானது) வெளியிட்டுள்ளது. அகில இந்தியா மற்றும் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான குறியீட்டெண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட 1114 நகர்ப்புற சந்தைகள் மற்றும் 1181 கிராமங்களில் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய விலைத் தரவுகள் என்எஸ்ஓ-வின் களச் செயல்பாட்டுப் பிரிவின் களப்பணி அடிப்படையில் வாராந்திர முறையில் இதற்கான விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

2024 மார்ச் மாதத்தைப் பொறுத்தவரை பொது குறியீடுகள் அடிப்படையில் அகில இந்திய சில்லறை பணவீக்க 4.85 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 5.66 சதவீதமாக இருந்தது.

மேலும் விவரமான அறிக்கையை படிக்க: https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2017771


2024 மார்ச் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 4.85 சதவீதமாக குறைந்தது
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta