மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான ஆர்இசி-க்கு சொந்தமான துணை நிறுவனமான ஆர்இசி பவர் டெவலப்மென்ட் அண்ட் கன்சல்டன்சி லிமிடெட் (ஆர்இசிபிடிசிஎல்) இரண்டு மின் பரிமாற்ற திட்டங்களை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இரண்டு திட்டம் சார்ந்த சிறப்பு நோக்க நிறுவன அமைப்புகளை (எஸ்பிவி) ஒப்படைத்துள்ளது.
மத்திய மின்சார அமைச்சகத்தின் மாநிலங்களுக்கிடையேயான மின் தொடரமைப்புத் திட்டமான “மகாராஷ்டிர மாநிலம் கல்லம் பகுதியில் மேற்கு மண்டல கட்டமைப்பு விரிவாக்கத் திட்டம்” என்ற பெயரில் கல்லம் டிரான்ஸ்கோ லிமிடெட் என்ற சிறப்பு நோக்கு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு நோக்கு நிறுவனம் வெற்றிகரமான ஒப்பந்ததார நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மற்றொரு சிறப்பு நோக்க நிறுவனம் ஜல்புரா குர்ஜா பவர் டிரான்ஸ்மிஷன் லிமிடெட் , துணை மின் நிலையம் மெட்ரோ டிப்போ (கிரேட்டர் நொய்டா) மற்றும் துணை மின் நிலையம் ஜல்புரா ஆகியவற்றை நிர்மாணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நோக்கு நிறுவனம் வெற்றிகரமான ஏலதாரரான டாடா பவர் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஆர்இசிபிடிசிஎல் தலைமை நிர்வாக அதிகாரி திரு ராஜேஷ் குமார் மற்றும் உத்தரபிரதேச பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் ஏப்ரல் 5, 2024 அன்று வெற்றிகரமான ஏலதாரர்களிடம் இந்த சிறப்பு நோக்க நிறுவனங்கள் ஒப்படைக்கப்பட்டன.
ஆர்இசி லிமிடெட் நிறுவனத்திற்கு முழுமையாக சொந்தமான துணை நிறுவனமான ஆர்இசி பவர் டெவலப்மென்ட் அண்ட் கன்சல்டன்சி லிமிடெட், 50 க்கும் மேற்பட்ட மாநில மின் விநியோக நிறுவனங்கள் மற்றும் மாநிலங்களின் மின் துறைகளுக்கு ஆலோசனை மற்றும் நிபுணத்துவ திட்ட அமலாக்க சேவைகளை வழங்கி வருகிறது. மின் தொடரமைப்பு திட்டங்கள் மற்றும் மறுசீரமைப்பு திட்டங்களில் கட்டண அடிப்படையிலான போட்டி ஏலத்திற்கான ஏல செயல்முறை ஒருங்கிணைப்பாளராகவும் இது செயல்பட்டு வருகிறது.