Wed. Jan 8th, 2025

Category: இந்தியா

இந்தியா

உள்நாட்டில் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ள பொருட்களின் இறக்குமதியைக் குறைத்து உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்- தொழில், வர்த்தகத் துறையினருக்கு குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்

பொருளாதார தேசியவாதத்தை தழுவுமாறு மக்களை  குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.  தவிர்க்க வாய்ப்புள்ள இறக்குமதிப் பொருட்களின் இறக்குமதியைக் குறைத்து அவற்றின் உள்ளூர் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்குமாறு தொழில் வர்த்தகத் துறையினருக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். ஆந்திர மாநிலம் வெங்கடாசலத்தில் உள்ள ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையில் நடைபெற்ற 23-வது ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ஜக்தீப் தன்கர், சுதேசியின் ஒரு அம்சமாக பொருளாதார தேசியவாதம் என்ற கருத்தை வலியுறுத்தினார். அந்நியச் செலாவணி வெளியேற்றம், இந்திய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் இழப்பு உள்ளிட்டவை, தேவையற்ற இறக்குமதிகளால் ஏற்படும் எதிர்மறைத் தாக்கங்கள் என அவர் எடுத்துரைத்தார். உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இந்த பிரச்சினையைத் தீர்க்குமாறு அவர் தொழில்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தார். இது இந்திய தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதோடு தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் என அவர் குறிப்பிட்டார். இயற்கை வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதற்கான தேவையை அவர் சுட்டிக் காட்டினார். நிதி அதிகாரத்தை விட தேவையின் அடிப்படையில் வளங்களைப் பயன்படுத்துமாறு மக்களை அவர் வலியுறுத்தினார். பொறுப்பற்ற செலவினங்கள் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வை பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். பணத்தின் சக்தியை வைத்து தேவையில்லாமல் செலவு செய்தால், எதிர்கால சந்ததியினருக்கு அது சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். அரசியல், சுய மற்றும் பொருளாதார நலன்களை விட நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த திரு ஜக்தீப் தன்கர், அனைவரது மனநிலையிலும் இந்த மாற்றம் எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தேச ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் உறுதியான நடவடிக்கைகளின் அவசரத் தேவையையும்  எடுத்துரைத்தார். முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு மீதான தமது ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்திய குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், தேசத்தின் நலனுக்காக திரு வெங்கையா நாயுடுவின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார். அவர் தொடங்கிய இந்த அறக்கட்டளை பல நல்ல பணிகளைச் செய்து வருவதாகத் திரு ஜக்தீப் தன்கர் பாராட்டுத் தெரிவித்தார்.

எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கான இ-ஏல நிகழ்வும் கடனுதவி நிகழ்வும் ராஞ்சியில் நடைபெற்றன

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள துபுதானா தொழிற்சாலை பகுதியில் எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கான இ-ஏல நிகழ்வையும், கடனுதவி நிகழ்வையும் தேசிய எஸ்சி,எஸ்டி மைய அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. அரசு இ-சந்தை, எச்டிஎப்சி வங்கி ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில்…

புவி கண்காணிப்பிற்கான இஸ்ரோவின் இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

இஸ்ரோவின் சமீபத்திய புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ‘இ.ஓ.எஸ் -08’,  சிறிய செயற்கைக்கோள் செலுத்து வாகனம் (எஸ்.எஸ்.எல்.வி) -டி 3 மூலம், இன்று காலை 9:17 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இ.ஓ.எஸ்-08 பணியின் முதன்மை…

குறைக்கடத்தி உற்பத்தியில் உலகளாவிய தலைவராக வருவதற்கு இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்

78-வது சுதந்திர தினத்தையொட்டி இன்று செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி,  2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவது பற்றியும், இந்தியாவின்  வளர்ச்சியைக் கட்டமைப்பதற்கான எதிர்கால இலக்குகள் பற்றியும் எடுத்துரைத்தார். குறைக்கடத்தி உற்பத்தியில் உலகளாவிய தலைவராக வருவதற்கு இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பிரதமர் எடுத்துரைத்த போது, நமது பயன்பாட்டுக்கு…

பிரசார் பாரதி-ஒளிபரப்பு மற்றும் ஒலிபரப்புக்கான பகிரப்பட்ட ஆடியோ காட்சிகள் (PB-SHABD): ஒரு விரிவான செய்தி பகிர்வு சேவை

பிரசார் பாரதி-ஒளிபரப்பு மற்றும்  ஒலி பரப்புதலுக்கான பகிரப்பட்ட ஆடியோ-காட்சிகள் (PB-SHABD) மார்ச் 13, 2024 அன்று வீடியோ ஆடியோ, உரை மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தினசரி செய்திகளை ஊடக நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட செய்தி பகிர்வு சேவையாக தொடங்கப்பட்டது.…

MDNIY மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது

மொரார்ஜி தேசாய் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் யோகா, கார்கி கல்லூரி, டெல்லி பல்கலைக்கழகம், தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) ஆகியவற்றுடன் ஒரே நாளில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) கையெழுத்திட்டதன் மூலம் குறிப்பிடத்தக்க…

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு அறிமுகம் ஆகியவை தொழிற்பயிற்சி நிலையங்களை மாற்றியமைக்க உதவும்: மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஜெயந்த் சவுத்ரி

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் நாட்டின் தொழிற்பயிற்சியில் புரட்சியை ஏற்படுத்துவதையும், டிஜிட்டல் பொருளாதாரத்தில் முன்னணியில் அதன் பணியாளர்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான சிறந்த  முயற்சிகளைத் தொடங்குவதாக அறிவித்தது. நொய்டாவில் உள்ள தேசிய திறன் பயிற்சி நிறுவனத்திற்கு மத்திய…

சென்னை ஐஐடியில் சி.எஸ்.ஆர் முன்முயற்சியின் கீழ் ஆராய்ச்சி உடற்கூறியல் ஆய்வகத்தை பி.எஃப்.சியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் திறந்து வைத்தார்

மின் நிதிக் கழகத்தின்  (பி.எஃப்.சி) தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் திருமதி பர்மிந்தர் சோப்ரா, சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐ.ஐ.டி) மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அதிநவீன உடற்கூறியல் ஆய்வகத்தைத் திறந்து வைத்தார். இந்த மேம்பட்ட வசதி, பி.எஃப்.சியின்…

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் மற்றும் அமெரிக்க அரசின் சிறு வணிக நிர்வாக அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

ஜூன் 2023 இல் இந்திய-அமெரிக்க கூட்டு அறிக்கையில் இரு நாடுகளின் தலைவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின்படி இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ்.சி.எல் தாஸ் மற்றும் அமெரிக்க அரசின் சிறு வணிக நிர்வாக அமைச்சகத்தின்…

டிஜிட்டல் சுகாதார கல்வியை அதிகரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் – தேசிய சுகாதார ஆணையமும் மகாராஷ்டிர சுகாதார அறிவியல் பல்கலைக்கழகமும் கையெழுத்திட்டன

இந்தியா முழுவதும் டிஜிட்டல் சுகாதாரக் கல்வியை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தேசிய சுகாதார ஆணையமும் (NHA) மகாராஷ்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகமும் (MUHS) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.  மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே. பி. நட்டா…

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta