புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் செய்தி
தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை அரசு நீட்டித்துள்ளது மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது . 2024, மார்ச் 15 அன்று வெளியிடப்பட்ட திட்ட வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ளபடி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டம் 2025-26 நிதியாண்டு வரை மொத்தம் ரூ.400 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து மற்றும் பயன்பாடு உட்பட பசுமை ஹைட்ரஜன் மதிப்புத் தொடரின் அனைத்துக் கூறுகளையும் இது உள்ளடக்கியது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் இலக்கு சார்ந்ததாகவும், காலவரையறைக்கு உட்டதாகவும், அளவிடுவதற்கு ஏற்றதாகவும் இருக்கும். தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்டார்ட் அப்,…