Sat. Jan 11th, 2025

Category: இந்தியா

இந்தியா

திரு கே. காமராஜர் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

பிரதமர் திரு நரேந்திர மோடி, கர்ம வீரர் திரு கே காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது; “திரு கே காமராஜ் அவர்களின் பிறந்த நாளில் அவரை நான் நினைவுகூர்கிறேன். தனது…

நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பது – தரவு குறியாக்கத்தில் மிகப்பெரிய ‘குவாண்டம்’ – தரவுகளை குறியீடாக்குவதில் வளர்ச்சி

இந்திய விஞ்ஞானிகள் இணையப் பாதுகாப்பில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளனர். அவர்கள் உண்மையிலேயே கணிக்க முடியாத சீரற்ற எண்களை உருவாக்க புதிய, பயனர் நட்பு வழியை உருவாக்கியுள்ளனர், இது குவாண்டம் தகவல்தொடர்புகளில் வலுவான குறியாக்கத்திற்கு முக்கியமானது. இந்த முன்னேற்றம் எதிர்காலத்தில் முக்கியமான தரவை…

மத்திய அரசின் முதல் 100 நாட்கள் திட்டமிடலின் ஒரு பகுதியாக 133 இணை, துணை அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகளில் மின்னணு அலுவலக முறை அமல்படுத்தப்பட உள்ளது

கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை  மின்னணு அலுவலக நடைமுறை மூலம் மத்திய அரசின் செயலகங்கள் 37 லட்சம் கோப்புகளைக் கையாண்டுள்ளது. அதாவது 94 சதவீத கோப்புகள் மின்னணு கோப்புகளாகவும், 95 சதவீத பெறுதல்கள் மின்னணு வாயிலாகவும் கையாளப்பட்டது. இம்முயற்சியை மேலும் நடைமுறைப்படுத்த மின்னணு அலுவலக முறையை அரசு ஊக்குவித்தது. இதற்கிடையே, அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனைகளுக்குப் பிறகு மத்திய அரசின் முதல் 100 நாட்கள் திட்டமிடலின் ஒரு பகுதியாக, 133 இணை, துணை அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகளில் மின்னணு அலுவலக முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதனை செயல்படுத்துவதற்கான வழிவகைகள், நிர்வாக தொழில்நுட்ப…

3வது GCTC சைபர் பாதுகாப்பு மாநாட்டில் துணைத் தலைவர் உரை

உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,  உங்களிடம் ஒரு நிகழ்ச்சி நிரல் இல்லை என்று ஜெனரல் சிங் கூறினார். ஒரு வகையில் உண்மை. ஏனெனில் அது களங்கமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. நீங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட காரணத்திற்காக சேவை செய்கிறீர்கள். ஆனால் உங்களது முந்தைய இரண்டு…

ஊட்டியில் 3 நாள் இயக்குநர்கள் சான்றிதழ் மாஸ்டர் அமர்வை இந்திய பெருநிறுவனங்கள் விவகார நிறுவனம் தொடங்கியது

மத்திய அரசின் இந்திய பெருநிறுவனங்கள் விவகார நிறுவனம் தமிழகத்தின் ஊட்டியில் 3 நாள் இயக்குநர்கள் சான்றிதழ் மாஸ்டர் அமர்வை 2024, ஜூலை 10 அன்று தொடங்கியது. இந்த 3 நாள் அமர்வில் நாடு முழுவதும் உள்ள முன்னணி அமைப்புகளின் பெருநிறுவனங்களின் 50-க்கும்…

அரசு மின்சந்தை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 136 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

அரசு மின் சந்தைத் தளத்தின் (ஜிஇஎம்-ஜெம்) வணிக மதிப்பு இந்த நிதியாண்டின் முதல் காலாண்டின் முடிவில் ரூ.1,24,761 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில்ரூ.52,670 கோடியாக இருந்தது. அதன்படி 136 சதவீத வளர்ச்சியை இது பெற்றுள்ளது. வலுவான உள்நாட்டு மின்னணு கொள்முதல் சூழலை உருவாக்கும் லட்சிய நோக்குடன் 2016-ல் தொடங்கப்பட்ட அரசு மின் சந்தை, தனித்தனி அமைப்புகளை ஒருங்கிணைத்துள்ளது. இது அரசு கொள்முதல்களுக்கு பரவலாகப்…

நிதி மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்ளும் திறமையான பெண்களை இணைத்து செயல்பட ஃபிக்கி உறுப்பினர்களை குடியரசு துணைத்தலைவர் ஊக்குவித்தார்

நிதி மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்ளும் திறமையான பெண்களை இணைத்து செயல்பட இந்திய வர்த்தகம், தொழில்துறை கூட்டமைப்பின் (ஃபிக்கி), மகளிர் அமைப்பு உறுப்பினர்களைக் குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் ஊக்குவித்துள்ளார். இதன் மூலம் ஏற்படும் தாக்கத்தை குறிப்பிட்ட அவர், மகளிர் கல்வி மற்றும் பாதுகாப்புக்கு உதவுவது இணையற்ற திருப்தியையும் மகிழ்ச்சியையும் தரும் என்று தெரிவித்தார். குடியரசு துணைத்தலைவர் மாளிகையில், ஃபிக்கி மகளிர் அமைப்பின் சென்னை கிளை உறுப்பினர்களுடன், இன்று கலந்துரையாடிய திரு ஜக்தீப் தன்கர், பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தலுடன் தொடர்புடைய சமூக வளர்ச்சியை எடுத்துரைத்தார். “குடும்பத்தின் நிதிச்சூழலை ஒரு பெண் கட்டுப்படுத்தும்போது, குடும்பத்தின் பொருளாதாரமும், வளர்ச்சியும் உறுதி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இது கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில் பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளை வழிநடத்த குடும்பத்தினரையும் தொடர்புடைய…

உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிப்பதில் மேலும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசு உறுதிபூண்டுள்ளது: பாதுகாப்புத் துறை செயலாளர்

பாதுகாப்பு உற்பத்தியில் மேலும் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், சுற்றுச்சூழல் அமைப்புக்கு கைகொடுக்கவும் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை  செயலாளர் திரு கிரிதர் அரமனே கூறினார். ஜூலை 9, 2024 அன்று இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்துடன்  இணைந்து தர உத்தரவாத இயக்குநரகம்  மெய்நிகர் முறையில் நடத்திய தர சீர்திருத்தங்கள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கில் அவர் உரையாற்றினார். பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைவதற்கான அவசியத்தை வலியுறுத்திய அவர், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்த தொலைநோக்கை நனவாக்குவதில் சம்பந்தப்பட்ட அனைவரும், குறிப்பாக உள்நாட்டு பாதுகாப்புத் தொழில்துறையின் முக்கியப் பங்கை வலியுறுத்தினார். 250-க்கும் மேற்பட்ட பாதுகாப்புத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எஸ்ஐடிஎம், ஃபிக்கி, அசோசெம், பிஎச்டி சிசிஐ, சேவை தலைமையகம், பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள், அரசு தர உதவி முகமைகள், ஸ்டார்ட்-அப்கள், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் ஆகியோர் கருத்தரங்கில் பங்கேற்றனர். பாதுகாப்புத் துறையில் வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் வகையில், உள்நாட்டு பாதுகாப்புத் தளவாட உற்பத்தியாளர்கள், அரசு தர உதவி முகமைகள் மற்றும் இதர பங்குதாரர்களிடையே இதுபோன்ற கலந்துரையாடல்களை மேலும் தொடர்ந்து நடத்துவது என்ற முடிவுடன் கருத்தரங்கு நிறைவடைந்தது.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் புதிய சாதனை படைத்துள்ளது

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், 2023-24 நிதியாண்டில் உற்பத்தி, விற்பனை, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் புதிய சாதனை படைத்துள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான தற்காலிக புள்ளிவிவரங்களை இன்று வெளியிட்ட காதி கிராமத் தொழில் தலைவர் திரு மனோஜ் குமார், முந்தைய அனைத்து புள்ளிவிவரங்களையும் மிஞ்சும் வகையில், 2013-14 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது விற்பனையில் 399.69 சதவீதம், (தோராயமாக 400%), உற்பத்தியில் 314.79 சதவீதம் (தோராயமாக 315%), மற்றும் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் 80.96 சதவீதம் (தோராயமாக 81%) அதிகரித்துள்ளது என்றார். காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் இந்த குறிப்பிடத்தக்க செயல்திறன், 2047-க்குள் ‘வளர்ந்த இந்தியா’ என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கும், இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது என்று திரு குமார் கூறினார். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக, 2023-24 நிதியாண்டில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தயாரிப்புகளின் விற்பனை ரூ.1.55 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 2022-23 நிதியாண்டில் விற்பனை எண்ணிக்கை ரூ.1.34 லட்சம் கோடியாக இருந்தது. மோடி அரசின் கடைசி 10 நிதியாண்டுகளில், கிராமப்புறங்களில் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு காதி மற்றும் கிராமத் தொழில் பொருட்களின் விற்பனை, 2013-14 நிதியாண்டில் ரூ.31154.20 கோடியாக இருந்தது, இது 2023-24 நிதியாண்டில் மிக உயர்ந்த மட்டமான ரூ.155673.12 கோடியாக உயர்ந்துள்ளது, இது இதுவரை இல்லாத மிகப்பெரிய சாதனையாகும். 2023-24 நிதியாண்டில், ஆணையத்தின் முயற்சிகள் கிராமப்புறங்களில் 10.17 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கி, கிராமப்புற இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளன. இந்த வரலாற்று சாதனைக்கு வணக்கத்திற்குரிய அண்ணலின் உத்வேகம், பிரதமர் திரு நரேந்திர மோடியின் உத்தரவாதம் மற்றும் நாட்டின் தொலைதூர கிராமங்களில் பணிபுரியும் கோடிக்கணக்கான கைவினைஞர்களின் அயராத முயற்சிகள் ஆகியவை காரணம் என்று அவர் கூறியுள்ளார். 2013-14 நிதியாண்டில் ரூ.26,109.08 கோடியாக இருந்த காதி மற்றும் கிராமத் தொழில் தயாரிப்புகளின் உற்பத்தி, 2023-24 நிதியாண்டில் ரூ.108,297.68 கோடியை எட்டியது, இது 314.79 சதவீதம் அதிகரித்து, 2022-23 நிதியாண்டில் உற்பத்தி ரூ.95956.67 கோடியாக இருந்தது. தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தியே கதர் கிராமத் தொழில் ஆணையம் கிராமப்புறங்களில் வரலாற்றுப் பணிகளைச் செய்துள்ளது என்பதற்கு வலுவான சான்றாகும். கடந்த 10 நிதியாண்டுகளில் கதர் மற்றும் கிராமத் தொழில் தயாரிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் புதிய விற்பனையில் சாதனை படைத்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் கதர் துணிகளின் உற்பத்தியும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 2013-14 நிதியாண்டில் காதி துணிகளின் உற்பத்தி ரூ.811.08 கோடியாக இருந்த நிலையில், 2023-24 நிதியாண்டில் 295.28 சதவீதம் உயர்ந்து ரூ.3,206 கோடியை எட்டியது. கடந்த 10 நிதியாண்டுகளில் கதர் துணிகளுக்கான தேவையும் வேகமாக அதிகரித்துள்ளது. கதர் கிராமத் தொழில் ஆணையத்தின் முக்கிய நோக்கம் கிராமப்புறங்களில் அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகும். கடந்த பத்து ஆண்டுகளில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம்  இதில் சாதனை படைத்துள்ளது.…

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) மற்றும் MS சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (MSSRF) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன.

கிராமப்புற, பழங்குடியினர் மற்றும் விவசாய சமூகங்களின் வாழ்வாதாரத்தை உருவாக்குவது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மையமாகும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) மற்றும் MSA ஆராய்ச்சி அறக்கட்டளை (MSSRF) ஆகியவை கிராமப்புற, பழங்குடியினர் மற்றும் விவசாய சமூகங்களிடையே வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்காக இணைந்து…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta