Sun. Jan 12th, 2025

Category: இந்தியா

இந்தியா

ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவின் பதவிக்காலத்தை 2024 ஜூன் 30 வரை ஒரு மாதம் நீட்டிக்க அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல்

அமைச்சரவையின் நியமனக் குழு, மே 26, 2024 அன்று, ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் சி பாண்டேவின் பதவிக்காலத்தை ஒரு மாத காலத்திற்கு, அவரது சாதாரண ஓய்வு வயதுக்கு அப்பால் (மே 31, 2024), அதாவது ஜூன் 30, 2024 வரை,…

பொது காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஆயுஷ் மருத்துவமனை உரிமையாளர்களுக்கான உணர்திறன் திட்டத்துக்கு ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு

காப்பீட்டுத் துறைக்கு இடையே ஆழமான புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், அனைத்து குடிமக்களுக்கும், ஆயுஷ் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வழங்குநர்கள் மூலம் மலிவு விலையில் ஆயுஷ் சுகாதாரத்தை வழங்குவதற்கும், இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், பொது காப்பீட்டு நிறுவனங்களின் நிர்வாக தலைமைக்…

கோதுமை கொள்முதல் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது, சென்ற ஆண்டின் மொத்த கொள்முதலை விஞ்சியுள்ளது

2024-25 ரபி சந்தைப் பருவத்தில் நாட்டில் உள்ள முக்கிய கொள்முதல் மாநிலங்களில் கோதுமைக் கொள்முதல் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மத்தியத் தொகுப்பிற்கு இதுவரை 262.48 லட்சம் டன் கோதுமைக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் 262.02 லட்சம்…

நிதியாண்டு 2024 தணிக்கை செய்யப்பட்ட முடிவுகளை என்.டி.பி.சி அறிவித்துள்ளது; என்.டி.பி.சி குழும மின் உற்பத்தி 6% அதிகரித்து, வரிக்குப் பிறகான லாபம் 25% அதிகரிப்பு

என்.டி.பி.சி நிறுவனம், 76,015 மெகாவாட் நிறுவப்பட்ட குழு திறன் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின் பயன்பாட்டின், 2023-24 நிதியாண்டிற்கான நிதி முடிவுகளை மே 24, 2024 அன்று அறிவித்துள்ளது. நிதியாண்டு 2023 இன் 399 பில்லியன் யூனிட்களுடன் ஒப்பிடும்போது நிதியாண்டு…

‘தூர்தர்ஷன்’: செயற்கை நுண்ணறிவு காலத்தில்

டிடி கிசான் 26 மே 2024 அன்று AI கிரிஷ் மற்றும் AI பூமி ஆகிய இரண்டு AI அறிவிப்பாளர்களை அறிமுகப்படுத்துகிறார். AI அறிவிப்பாளர்கள் ஐம்பது மொழிகளில் பேச முடியும் 9 வருட அபார வெற்றிக்குப் பிறகு தூர்தர்ஷன் மற்றொரு மைல்கல்லை…

ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் சைபர் பாதுகாப்புப் பயிற்சி 2024-ல் கலந்து கொண்டார்

2024 மே 22, அன்று நடைபெற்ற ‘சைபர் பாதுகாப்பு – 2024’ பயிற்சியில் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் கலந்து கொண்டு, இந்தியாவின் இணைய பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். விரிவான சைபர் பாதுகாப்புப் பயிற்சி, சைபர் பாதுகாப்பு முகமையால் 2024 மே 20 தொடங்கி 24 வரை நடத்தப்படுகிறது. இது அனைத்து சைபர் பாதுகாப்பு அமைப்புகளின் இணையப் பாதுகாப்புத் திறனை மேலும் மேம்படுத்துவதையும், அனைத்துப் பங்குதாரர்களிடையே…

வட இந்தியாவில் காற்று மாசு மற்றும் சுகாதார விளைவுகள் குறித்த அடிப்படை ஆராய்ச்சியை ஜோத்பூர் ஐஐடி வெளியிட்டுள்ளது

உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு கடுமையான சுகாதார தாக்கங்களுடன், காற்று மாசுபாடு ஒரு முக்கியமான உலகளாவிய சவாலாக உள்ளது. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, ஜோத்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் அடிப்படை ஆராய்ச்சியை வெளியிட்டுள்ளார். இதில் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் வட இந்தியாவில் உள்ள துகள்களின் ஆதாரங்கள் மற்றும் கலவைக் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் காற்று மாசுபாடு நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு உள்ளூர் சமூகங்கள் மற்றும் தொடர்புடையவர்களிடையே ஒத்துழைப்பும், குறிப்பாக தில்லி போன்ற மக்கள்தொகை நெருக்கம் கொண்ட நகர்ப்புறங்களில் சமூக மாற்றங்களும் தேவை என்று கட்டுரையின் ஆசிரியரும், இணைப் பேராசிரியருமான டாக்டர் தீபிகா பட்டு வலியுறுத்துகிறார். தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை ஊக்குவித்தல், எரிப்பு செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் காலாவதியான, அதிக சுமை மற்றும் தகுதியற்ற  வாகனங்களிலிருந்து வெளிவரும் மாசுவைத் தடுத்தல் ஆகியவற்றுக்கு ஒருங்கிணைந்த நிலையான முயற்சிகள் தேவை என்று அவர் கூறுகிறார்.  இணைப் பேராசிரியர் டாக்டர். தீபிகா பட்டு, ஐஐடி ஜோத்பூர் எதிர்கால சந்ததியினருக்கு பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஆதார அடிப்படையிலான கொள்கைகள் மற்றும் தலையீடுகளுக்கான மதிப்புமிக்க நுண்ணறிவுகளை தங்களுடைய ஆய்வு வழங்குவதாக அவர் தெரிவிக்கிறார். மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்…

கொச்சியில் நடைபெறும் 46-வது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டத்தில் அண்டார்டிகா சுற்றுலா குறித்த முதலாவது பணிக்குழு விவாதங்களுக்கு இந்தியா ஏற்பாடு செய்துள்ளது

46-வது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவின் 26-வது கூட்டத்தில் அண்டார்டிகாவில் சுற்றுலாவை ஒழுங்குபடுத்துவதில் கவனம் செலுத்துவது தொடர்பான விவாதங்களை நடத்துவதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க உள்ளது. புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள கோவாவின்…

டிபிஐஐடியின் சிமென்ட் மற்றும் கட்டிடப் பொருட்களுக்கான தேசிய கவுன்சிலில் இன்குபேஷன் மையம் திறக்கப்பட்டது

புதிய கண்டுபிடிப்புகள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் நாட்டின் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழலில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான நோக்கத்துடன் இந்திய அரசு 16 ஜனவரி 2016 அன்று ஸ்டார்ட்அப் இந்தியா முயற்சியைத் தொடங்கியது. நீடித்த முயற்சிகள் எண்ணிக்கையில் அதிகரிப்புக்கு வழிவகுத்தது என்று…

மக்களவைக்கு நாளை நடைபெறவுள்ள 5-ம் கட்ட வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன

மக்களவைத் தேர்தலின் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நாளை (20.05.2024) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒடிசா சட்டப்பேரவையின் 35 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.…

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta