அரசின் தலைமை பதவியில் தலைவராக 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு நமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். குஜராத் முதலமைச்சராக தாம் பதவி வகித்த காலத்தை நினைவு கூர்ந்த திரு நரேந்திர மோடி, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வளத்தை உறுதி செய்ய பாடுபட்டதாக தெரிவித்துள்ளார். ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்’ என்பதற்கு குஜராத் ஒரு சிறந்த உதாரணமாக உருவெடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த பத்தாண்டுகளை நினைவுகூர்ந்த பிரதமர், இந்தியாவின் வளர்ச்சிப் போக்குகள், நமது நாட்டை உலக அளவில் மிகுந்த நம்பிக்கையுடன் பார்ப்பதை உறுதி செய்துள்ளது என்று கூறியுள்ளார். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கூட்டு இலக்கை அடையும் வரை ஓய்வெடுக்கப் போவதில்லை என்றும் ஓய்வின்றி உழைக்கப் போவதாகவும் அவர் மக்களுக்கு உறுதியளித்தார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில் கூறியிருப்பதாவது: “நான் ஒரு அரசின் தலைமை பதவியில் தலைவராக 23 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் இந்த நிலையில், ஆசீர்வாதங்களையும் நல்வாழ்த்துக்களையும் வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. 2001 அக்டோபர் 07 அன்று நான் குஜராத்தின் முதலமைச்சராக பணியாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். பிஜேபி கட்சி என்னைப் போன்ற ஒரு எளிய தொண்டரிடம் மாநில நிர்வாகத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பை ஒப்படைத்தது எனது கட்சியின் மகத்துவம்.” “நான் முதல்வராக பதவியேற்றபோது, குஜராத் பல சவால்களை எதிர்கொண்டது. 2001 கட்ச் பூகம்பம், அதற்கு முன்பு ஒரு பெரிய சூறாவளி, மிகப்பெரிய வறட்சி, பல ஆண்டுகளாக காங்கிரஸ்…