Wed. Dec 25th, 2024

Month: July 2024

குறு, சிறு, நடுத்தர தொழில்துறை இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வதால், இத்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதிசெய்ய கிராமப்புறத் தொழில் முனைவோருக்கு அதிகாரமளிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என திரு ஜிதன் ராம் மஞ்ஜி தெரிவித்துள்ளார்

திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவை ஊக்குவிக்கும் விதமாக,புதுதில்லி ஓக்லா பகுதியில் உள்ள தேசிய சிறு தொழில் கழக தொழில்நுட்ப சேவை மையத்தில் நடைபெற்ற புதிய திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தை, மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் திரு…

‘நமது நம்பிக்கைகளுக்கான சிறகுகள், ‘ஆஷோன் கீ உடான், கஹானி ராஷ்டிரபதி பவன் கி, குடியரசுத் தலைவர் மாளிகை: பாரம்பரியம் நிகழ்காலத்தை சந்திக்கிறது’ ஆகிய நூல்களின் முதல் பிரதிகளைக் குடியரசுத்தலைவர் பெற்றுக்கொண்டார்

மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகானிடமிருந்து, நமது நம்பிக்கைகளுக்கான சிறகுகள், ‘ஆஷோன் கீ உடான், கஹானி ராஷ்டிரபதி பவன் கி, குடியரசுத் தலைவர் மாளிகை: பாரம்பரியம் நிகழ்காலத்தை சந்திக்கிறது’ ஆகிய நூல்களின் முதல்…

ஸ்ரீ ஜுவல் ஓரம் அடுத்த 100 நாட்களுக்கு பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள திட்டங்கள் மற்றும் முக்கிய முயற்சிகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்கிறார்

இன்று புது தில்லியில் நடந்த ஒரு நாள் கூட்டத்தில், மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் ஸ்ரீ ஜுவல் ஓரம் மற்றும் இணை அமைச்சர் ஸ்ரீ துர்காதாஸ் உய்கே ஆகியோர் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அடுத்த 100 நாட்களுக்கு அமைச்சகத்தின் முக்கிய முயற்சிகள்…

அமெரிக்க இந்திய வர்த்தக சபையின் சுகாதார உச்சி மாநாட்டில் மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் உரையாற்றினார்; அனைவருக்கும் எளிதில் சுகாதார சேவைகள் கிடைக்க தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துமாறு வலியுறுத்தினார்

புதுதில்லி ஹோட்டல் தாஜ் நகரில் நடைபெற்ற அமெரிக்க இந்திய வர்த்தக சபையின் (ஏஎம்சிஏஎம்) இரண்டாவது சுகாதார உச்சி மாநாட்டில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் அனைவருக்கும் குறைந்த செலவில் சுகாதார பராமரிப்பு சேவைகள் கிடைக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். “புதுமையான, எளிதில் அணுகக்கூடிய சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் கிடைப்பதை விரைவுபடுத்துதல்: தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றம்” என்ற இந்த உச்சிமாநாட்டின் மையக்கருத்தை அமைச்சர் பாராட்டினார். இந்தியாவில் அனைவருக்கும் குறைந்த செலவில் தரமான சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். சுகாதார சேவைகளில் அமெரிக்க-இந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க சுகாதார வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள்,  தொழில்துறைப் பிரதிநிதிகள் ஆகியோரின் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்த வகையான உச்சிமாநாடுகள் முக்கிய வழிகாட்டியாக இருக்கும் என்றும் திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். தொற்று நோய்கள் ஒழிப்பு, தொற்றா நோய்களைக் குறைத்தல், சுகாதார குறியீடுகளை உருவாக்குதல், நிலையான முன்னேற்றம் ஆகியவற்றுடன் ஆரோக்கியமான இந்தியாவை நோக்கிய பார்வையுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தான்  அரசு செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.  தொழில்நுட்பம் சுகாதாரத் துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.  செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்றவற்றால் சுகாதார சேவைகளில் நமது திறன்களை கணிசமாக மேம்படுத்த முடியும் அவர் குறிப்பிட்டார். பொது சுகாதாரம் என்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல எனவும் தனியார் பங்களிப்பு இதில் சமமாக முக்கியமானது என்றும் அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறினார்.

டாக்டர் ஆர் பாலசுப்ரமணியத்தின் ‘பவர் விதின்: தி லீடர்ஷிப் லெகசி ஆஃப் நரேந்திர மோடி’ புத்தகத்தில் பிரதமர் கையெழுத்திட்டார்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று டாக்டர் ஆர் பாலசுப்ரமணியத்தை சந்தித்து, ‘பவர் விதின்: தி லீடர்ஷிப் லெகசி ஆஃப் நரேந்திர மோடி’ என்ற புத்தகத்தின் நகலில் கையெழுத்திட்டார். இந்தப் புத்தகம் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைப் பயணத்தைப் படம்பிடித்து, மேற்கத்திய…

ஸ்ரீ ஜோதிராதித்ய சிந்தியா தொலைத்தொடர்பு பங்குதாரர்களுடன் ஆலோசனை தளத்தை உருவாக்க முன்முயற்சி எடுக்கிறார்

தொலைத்தொடர்பு சுற்றுச்சூழல் அமைப்பு தொடர்பான விஷயங்களில் இது நுண்ணறிவுகளை வழங்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, வடகிழக்கு பிராந்திய தகவல் தொடர்பு மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில், தொலைத்தொடர்புத் துறை (DoT) இரு…

2030-க்குள் 4 பில்லியன் டாலர் MRO தொழில்துறையுடன் முன்னணி விமானப் போக்குவரத்து மையமாக இந்தியா மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது – மத்திய அமைச்சர் ஸ்ரீ ராம்மோகன் நாயுடு

உள்நாட்டு MRO தொழில்துறையை மேம்படுத்த, உலகளாவிய விமானப் போக்குவரத்து மைய நிலையை நோக்கமாகக் கொண்ட விமானப் பாகங்கள் மீது இந்தியா ஒரே மாதிரியான 5% ஐஜிஎஸ்டியை அமல்படுத்துகிறது.  மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர், ஸ்ரீ கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு, அனைத்து…

திரு கே. காமராஜர் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

பிரதமர் திரு நரேந்திர மோடி, கர்ம வீரர் திரு கே காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது; “திரு கே காமராஜ் அவர்களின் பிறந்த நாளில் அவரை நான் நினைவுகூர்கிறேன். தனது…

நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பது – தரவு குறியாக்கத்தில் மிகப்பெரிய ‘குவாண்டம்’ – தரவுகளை குறியீடாக்குவதில் வளர்ச்சி

இந்திய விஞ்ஞானிகள் இணையப் பாதுகாப்பில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளனர். அவர்கள் உண்மையிலேயே கணிக்க முடியாத சீரற்ற எண்களை உருவாக்க புதிய, பயனர் நட்பு வழியை உருவாக்கியுள்ளனர், இது குவாண்டம் தகவல்தொடர்புகளில் வலுவான குறியாக்கத்திற்கு முக்கியமானது. இந்த முன்னேற்றம் எதிர்காலத்தில் முக்கியமான தரவை…

மத்திய அரசின் முதல் 100 நாட்கள் திட்டமிடலின் ஒரு பகுதியாக 133 இணை, துணை அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகளில் மின்னணு அலுவலக முறை அமல்படுத்தப்பட உள்ளது

கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை  மின்னணு அலுவலக நடைமுறை மூலம் மத்திய அரசின் செயலகங்கள் 37 லட்சம் கோப்புகளைக் கையாண்டுள்ளது. அதாவது 94 சதவீத கோப்புகள் மின்னணு கோப்புகளாகவும், 95 சதவீத பெறுதல்கள் மின்னணு வாயிலாகவும் கையாளப்பட்டது. இம்முயற்சியை மேலும் நடைமுறைப்படுத்த மின்னணு அலுவலக முறையை அரசு ஊக்குவித்தது. இதற்கிடையே, அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனைகளுக்குப் பிறகு மத்திய அரசின் முதல் 100 நாட்கள் திட்டமிடலின் ஒரு பகுதியாக, 133 இணை, துணை அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகளில் மின்னணு அலுவலக முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதனை செயல்படுத்துவதற்கான வழிவகைகள், நிர்வாக தொழில்நுட்ப…

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta