மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புமுறை குறித்து அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களுக்கு நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறைச் செயலாளர் விளக்கம்
அமெரிக்க அரசின் பிரதிநிதிகளுடனும், ஐ.பி.எம் மையத்துடன் பணிபுரியும் பங்குதாரர்களுடனும் 3 ஜூன் 2024 அன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாட இந்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறைக்கு வாஷிங்டன், டி.சி.-இன், ஐ.பி.எம் அரசு அலுவல் மையம் அழைப்பு விடுத்திருந்தது. நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்வதை மையமாகக் கொண்ட 90 நிமிட கலந்துரையாடலில், பொது…